524. பெண் புலி நடத்திய தற்கொலை படை தாக்குதல்
ஈழத்தமிழர் பிரச்சினை உலக நாடுகளின் கவனத்திற்கு வந்து, போர் நிறுத்தத்திற்கு இலங்கைக்கு பல தரப்பிலிருந்தும் நெருக்கடி தரப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில், புலிகள் இப்படியொரு தற்கொலைத் தாக்குதலை நடத்தியிருக்க வேண்டாம். எது எப்படியிருப்பினும், இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. போரைத் தொடர இலங்கை அரசுக்கும், சிங்கள வெறியர்களுக்கும் ஒரு காரணம் கிடைத்து விட்டது. மேலும், அப்பாவித் தமிழர்கள் பலியாவார்கள் :-(
எ.அ.பாலா
***************************************
பிற்சேர்க்கை:
என்னை ஆபாசமாகத் திட்டி இப்பதிவை நீக்கும்படி ஒரு பின்னூட்டம் வந்தது. ஐபி முகவரியை பத்திரமாக வைத்திருக்கிறேன்!
பிரச்சினை என்னைத் திட்டியது பற்றி அல்ல! நான் சொல்ல வந்ததின் நோக்கம் புரியாமல், நான் என்னவோ சிங்கள அரசு செய்ததற்கு/செய்து வருவதற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் எழுதியிருப்பதாக சிலருக்குத் தோணலாம்! நிச்சயம் உண்மை அதுவல்ல! இலங்கை அரசை ஆதரிப்பதற்கு எனக்கு எந்த முகாந்திரமும் கிடையாது!
முதலில் இருந்தே, ஈழப் பிரச்சினையில் இந்திய அரசின் அக்கறையின்மை குறித்தும், போர் நிறுத்தத்தின் அவசியம் குறித்தும் நான் தொடர்ந்து எழுதி வருவதை என் வலைப்பதிவை வாசிக்கும் நண்பர்களும், டிவிட்டர் (twitter.com) நண்பர்களும் அறிவார்கள். சிங்கள ராணுவத்தின் வெறி அப்பாவி தமிழ் மக்கள் மேல் தீவிரமாகத் திரும்புமே என்ற ஆதங்கத்தில் தான் நான் எழுதியது. சிலர் திரிக்க முனைகிறார்கள் :-(
டமில்நெட் தளத்தில், Reports from Vanni indicate that the civilian casualties at the military checkpost claimed as 'IDP rescue centre' by the Sri Lanka Army (SLA) was in fact due to gunfire at the civilians by the SLA after a bomb blast, according to civilians who escaped the scene back to LTTE territory என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, சிவிலியன் உயிரிழப்புக்கு சிங்கள ராணுவமே காரணம் என்று சொல்லப்பட்டுள்ளது.
புலிகளால் பட்ட பாட்டை விட, இலங்கை அரசால், ஈழத்தமிழர்கள் பல காலமாக பல இன்னல்களைச் சந்தித்துள்ளனர் என்பதே என் கருத்து. போர்/வன்முறை நிரந்தரத் தீர்வை ஒருபோதும் ஏற்படுத்தாது. பேச்சுவார்த்தை மூலமே, தீர்வு காண முடியும். இந்தியா தலையிட விரும்பாத நிலையில், அமெரிக்கா/பிரிட்டன்/கனடா உருப்படியாக ஏதாவது செய்ய முன் வந்தால் மகிழ்ச்சியே.
எ.அ.பாலா
***********************************************
கொழும்பு: இலங்கையில் பெண் விடுதலைப் புலி நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில், ராணுவ வீரர்கள் 20 பேர் உட்பட 28 பேர் பலியாயினர்; 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இலங்கையில் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இப்படி சண்டை நடக்கும் பகுதியில் இருந்து பொதுமக்கள் பலர் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். கடந்த சில நாட்களில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளனர்.போர் நடக்கும் பகுதியில் இருந்து வெளியேறி வருபவர்களை விசாரித்து, பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதற்காக, ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் சோதனைச் சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. விஸ்வமடு அருகே சுந்தராபுரம் என்ற இடத்தில் உள்ள சோதனைச் சாவடி வழியாக நேற்று பலர் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அப்பாவி மக்களோடு ஊடுருவி வந்த பெண் விடுதலைப் புலி ஒருவர், சோதனைச் சாவடி அருகே வந்ததும், தன் உடலில் கட்டியிருந்த பயங்கர குண்டுகளை வெடிக்கச் செய்தார்.இதில், அதிகாரிகள் இருவர் உட்பட ராணுவத்தினர் 20 பேர் பலியாயினர்; அப்பாவி தமிழ் மக்கள் எட்டு பேர் இறந்தனர். இதுதவிர, 50 தமிழர்கள் காயமடைந்தனர். இவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.காலை 11.30 மணியளவில் இச்சம்பவம் நடந்தது. முல்லைத் தீவு அருகே போர் முனையில், கடந்த சில நாட்களாக இதுபோன்ற தாக்குதல்களை நடத்த புலிகள் பலமுறை முற்பட்டனர்.இருந்தாலும், அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது. ஆனாலும் நேற்று அவர்கள் தங்களின் தாக்குதலை நடத்தி விட்டனர். இந்த மாதத்தில் புலிகள் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
தாக்குதல் தொடர்பாக முதல் கட்டமாக கிடைத்த தகவல்களில் 28 பேர் இறந்ததாகவும், 50 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இறப்பு மற்றும் காயமடைந் தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என நம்பப்படுகிறது.தற்கொலைப் படை தாக்குதல் நடந்ததும், அந்த இடத்தை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தனர். மருத்துவக் குழுவினரும் அங்கு விரைந்தனர். காயமடைந்த பலர் கிளிநொச்சியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.கடந்த 4ம் தேதி யானையிறவு அருகே சாலை என்ற இடத்தில், 13 வயது சிறுமி மூலம் தற்கொலைப் படை தாக்குதலை நடத்த புலிகள் திட்டமிட்டனர்; ஆனால், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் மக்களை நாங்கள் காப்பாற்ற முற்படுகிறோம். ஆனால், புலிகள் அதைச் செய்ய விடுவதில்லை. அப்பாவி மக்கள் மத்தியில் தற்கொலைப் படை தாக்குதலை நடத்தி அவர்களைக் கொன்றுள்ளனர். இதுபோன்ற கொடூரமான தாக்குதல்களை நடத்த விடுதலைப் புலிகளின் "கரும் புலிகள்' தான் பயன் படுத்தப்பட்டு வருகின்றனர்' என, இலங்கை மீடியாத் துறை அமைச்சர் அனுரா பிரியதர்ஷனா யபா கூறினார்.
நன்றி: தினமலர்
19 மறுமொழிகள்:
Test !!!
//எது எப்படியிருப்பினும், இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. போரைத் தொடர இலங்கை அரசுக்கும், சிங்கள வெறியர்களுக்கும் ஒரு காரணம் கிடைத்து விட்டது. //
இப்படி சொல்வதற்காகவே போர் படைகளின் ஒட்டுக்குழுக்கள் செய்துஇருக்கலாமே!:(
அல்லது புலிகள் தான் செய்தார்கள் என்றால் தாங்கள் சொல்வது போல் இரானுவத்தால் பிரச்சாரம் செய்யப்படும்!
உலக நாடுகளுக்கும் இரானுவம் குண்டு போட்டு 1000 பேரை கொன்றால் கண்ணு தெரியாது ஆனா புலி பொது இடத்தில் குண்டு வெச்சு இரண்டு பேர் இறந்தாலே அது பிரச்சினையாக்கப்படும்!
சொல்ல முடியாது தல இதை ராஜபக்சேவே கூட செய்து இருக்கலாம்.. நடுநிலையான விசாரணையும் நடக்காது செய்தியும் வெளி வராது.. எவனுக்கு தெரிய போவுது..
இல்லாவிட்டால் மட்டும் சிங்கள அரசுதமிழர்களைத் தலையில் வைத்து கூத்தாடுமாக்கும்.
தமிழர்கள் என்ற காரணத்துக்காக, குழந்தைகளையும் கொல்வதற்காகச் சிங்கள அரசு போடுகின்ற நாடகம் தான், சிறுவர் போராளிகள். நீங்களும் அப்பாவி மாதிரி எங்களுக்குப் படம் ஓட்டுகின்றீர்கள்.
இந்த ஒன்றரை மாதத்தில் 1000 வரையிலான தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர். அதையும் இந்தத் தாக்குதல் நடக்கும் என்றா முதலே செய்து வைத்தார்கள்.
இந்தத் தாக்குதலின் போது புரியும். 20 வரையிலான சிங்களப்படைகள் கொல்லப்பட்டபோதும், அது படத்தில் வரவில்லை.அதில் தெரியும். இரண்டு தாக்குதலும் வெவ்வேறானவை என்று. குண்டு வெடித்தபின்னர், அப்பாவித் தமிழ்மக்களை ஈவிரக்கமின்றிச் சிங்கள அரசு பழி வாங்கியிருக்கின்றது. அதற்கு நீங்களும் ஒத்து ஊதுகின்றீர்கள்..
Please read this also.. In the event that this is "True".. Then who are we fighting for???
http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=40181
இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து கொன்று விட்டு அதனை பரப்புரை செய்வதன் வெற்றி
உங்களது கண்டனம் மூலமாகவே கிடைக்கிறது.
தமிழர்கள் ரெம்ப நல்லவர்கள் , சிறீலங்கா என்ன சொன்னாலும், அமெரிக்கா ,ஜக்கிய நாடுகள் போண்று நம்பி விடுகிறார்கள், காண்பிக்க படங்களில் ராணுவத்தின் ஒரு உடலைகூட காணவில்லையே ஏன், நடந்த தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையா? அல்லது நடவாததை நடந்ததாக கூறி அப்பாவி மக்களை கொல்லும் முயற்சியா? ஏன் சிவிலிய்ன்கள் சரணடையும் இடத்தில் செஞ்சிலுவைசங்கத்தினர் அனுமதிக்கப்படவில்லை.பொதுவாக காயப்டுபவர்களை வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கும் படையினர் இதில் காயப்பட்டவர்களை தமிழூடகவியயாளர் இலகுவில் அனுமதிக்கபடாத அனுராதபுர ,கொழும்பு வைத்திய சாலைகளில், அதுவும் உலங்கு வானூர்திமூலம் கொண்டு போனதின் மர்மம் என்ன?
பிரச்சார போரில் சிங்களம் தமிழரை விட விஞ்சி நிற்பது உண்மையே, எழிதில் தமிழரையும் உலகையும் நம்ப வத்து விடுகிறார்கள்.
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28355
மேற்கண்ட இணைப்பில் உங்கள் கேள்விக்குப் பதில் கிடைக்கிறது. இந்த அரசக் கோமாளித்தனம் அங்குள்ள மக்களுக்கும் நன்றாகவெ தெரியும் ஏனென்றால் அவர்கள் தெளிவாக இருக்கின்றார்கள். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு உயிருடன் போன மக்களும் விரைவில் காணாமல் போனோர் பட்டியலில் வருவார்கள், அரசாங்கம் யாழைக் கைப்பற்றிய செம்மணியில் தொலைந்த 600 இளைஞர்களின் எஞ்சங்களே இன்னும் கிடைக்கவில்லை 14 வருசங்கள் கழித்தும் கூட.
இன்றும் கூட கருணாநிதியின் பிரசார பீரங்கியான கலைஞர் டிவி மூலம் தம்பிராசாவை கொண்டு இந்திய அரசு மூலம் புனரமைப்பு வேலைகள் செய்ய தயாராக இருப்பதாகவும், ஈழம் பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டது போலவும், புலிகளால்தான் தமிழ்மக்கள் நிம்மதியாக இல்லாமலிருப்பதை போலவும், கருணாநிதியும், காங்கிரஸ் அரசும் ஈழத்தில் சுயநிர்ணய உரிமையை அளித்துவிட்டது போலவும் சந்திரகாசன் மூலமே தன் கோயபல்ஸ் வேலையே ஆரம்பித்து விட்டார்கள். ( கருணாநிதி குடும்பம் தனது பிசினசை விரிவு படுத்தவும் ஈழத்தில் ஒழுக்கக்கேடை அனுமதிக்கமாட்டார் என்பதாலும்தான் பிரபாகரனை சர்வாதிகாரி என்று கூப்பாடு போடுகிறாரோ...!)
போர் என்று வந்த பின் புலிகள் மட்டும் அறப்போர் நடத்த வேண்டும் என்பதும் சிங்களர் அக்கிரமபோர் நடத்லாம் என்பதும் எந்த ஊர் நியாயம்??
சிறுபிள்ளைத்தனமால்ல இருக்கு. போகும் ஒவ்வொரு தமிழ் உயிருக்குக்கும் சமமான எதிரி உயிர் போயிருந்தால் போர் எப்பொழுதோ நின்று சமஉரிமை கிடைத்திருக்கும்.
புலிகள் உடைத்தால் மண்குடம்?
tamilnet.புலிகளால் கப்பம் வாங்கிய பணத்தில் நடத்தப்படும் புலிகளின் பிரசார தளம்.
மருத்துவமனையில் குண்டுவீசியதை நியாபடுத்தியதை கண்டித்தும் பதிவு போட்டிருந்தால் உங்களின் நடுநிலையை நம்பிருக்கலாம்..
ஒரு தமிழ் சகோதரியின் துன்பம்.
Jenita - புலிகளால் மனிதக்கேடயங்களாக பாவிக்கப்பட்ட மக்கள் புலிகளின் பிடியை தகர்த்தெறிந்து கொண்டு பாதுகாப்பு தேடி அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் வரும் நிலையில் தாம் தனிமைப்பட்டு விடுவோம் தங்களை இராணுவம் இலகுவாக அழித்துவிடும் என்ற அச்சத்திலேயே புலிகளின் பிடியை உடைத்துக்கொண்டு வெளியேறும் தமிழ்மக்கள் மீதே புலிகள் தமது கொலைவெறியை காண்பித்துள்ளனர்> இதுதான் உண்மை. ஐயா அம்மா தாய் தகப்பன்மாரோ இனியும் புலிகள் கொடி பணியாரம் எண்டு கதைக்காதேங்கோ. என்ர கிராமத்தில் இருந்தே 120குடும்பங்களை இந்த புலிக் கொலைகாரரால் நாச்சிக்குடாவிலிருந்து பலாத்காரமாகக் கடத்திக்கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். அதில் பலரை இந்த நரபலிப்போர் பலி வாங்கி விட்டது. இந்த மனித வெடிகுண்டு சம்பவத்தில் எனது சொந்தங்கள் மட்டும் 4பேர் பலியாகியுள்ளனர். இது புலிகளால் திட்டமிட்டு அப்பாவிப் பொதுமக்கள் மீது நடாத்தப்பட்ட நரபலி வேட்டை. எந்தப் புலியாவது ஏதாவது நியாயம் சொல்ல விரும்பினால் எனது மெயிலுக்கு கதையுங்கோ. இங்கயிருந்து கொண்டு சும்மா வெட்டி வீரம் கதைக்க வேணாம். நானொரு பெண். நான் துணிந்து இலங்கைக்கு வரத் தயார். இங்கு கொடி பிடிக்கும் கடுதாசிப்புலி யாராவது தயாராயிருந்தால் வாருங்கோ மக்களுக்கு நல்லது நடக்குமெண்டால் அங்க போய்க் கொடி பிடிப்பம். யாரப்பா தயாராயிருக்கிறியள். jenita.arulappu@rocketmail.com
என்னை ஆபாசமாகத் திட்டி இப்பதிவை நீக்கும்படி ஒரு பின்னூட்டம் வந்தது. ஐபி முகவரியை பத்திரமாக வைத்திருக்கிறேன்!
பிரச்சினை என்னைத் திட்டியது பற்றி அல்ல! நான் சொல்ல வந்ததின் நோக்கம் புரியாமல், நான் என்னவோ சிங்கள அரசு செய்ததற்கு/செய்து வருவதற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் எழுதியிருப்பதாக சிலருக்குத் தோணலாம்! நிச்சயம் உண்மை அதுவல்ல! இலங்கை அரசை ஆதரிப்பதற்கு எனக்கு எந்த முகாந்திரமும் கிடையாது!
முதலில் இருந்தே, ஈழப் பிரச்சினையில் இந்திய அரசின் அக்கறையின்மை குறித்தும், போர் நிறுத்தத்தின் அவசியம் குறித்தும் நான் தொடர்ந்து எழுதி வருவதை என் வலைப்பதிவை வாசிக்கும் நண்பர்களும், டிவிட்டர் (twitter.com) நண்பர்களும் அறிவார்கள். சிங்கள ராணுவத்தின் வெறி அப்பாவி தமிழ் மக்கள் மேல் தீவிரமாகத் திரும்புமே என்ற ஆதங்கத்தில் தான் நான் எழுதியது. சிலர் திரிக்க முனைகிறார்கள் :-(
டமில்நெட் தளத்தில், Reports from Vanni indicate that the civilian casualties at the military checkpost claimed as 'IDP rescue centre' by the Sri Lanka Army (SLA) was in fact due to gunfire at the civilians by the SLA after a bomb blast, according to civilians who escaped the scene back to LTTE territory என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, சிவிலியன் உயிரிழப்புக்கு சிங்கள ராணுவமே காரணம் என்று சொல்லப்பட்டுள்ளது.
புலிகளால் பட்ட பாட்டை விட, இலங்கை அரசால், ஈழத்தமிழர்கள் பல காலமாக பல இன்னல்களைச் சந்தித்துள்ளனர் என்பதே என் கருத்து. போர்/வன்முறை நிரந்தரத் தீர்வை ஒருபோதும் ஏற்படுத்தாது. பேச்சுவார்த்தை மூலமே, தீர்வு காண முடியும். இந்தியா தலையிட விரும்பாத நிலையில், அமெரிக்கா/பிரிட்டன்/கனடா உருப்படியாக ஏதாவது செய்ய முன் வந்தால் மகிழ்ச்சியே.
எ.அ.பாலா
Anonymous has left a new comment on your post "524. பெண் புலி நடத்திய தற்கொலை படை தாக்குதல்":
அன்பின் enRenRum anbudan BALA,
உண்மையை இப்போவாவது புரிந்து கொண்டிர்களே. பொய்யின் மொத்த உருவம் புலிகள்.அவர்களின் முகவர்கள் (EDITED...) மாதிரி புலிப் பணத்தில் சுக போகவாழ்வு வாழ்வு மேற்கொள்ளும் ஆட்கள். பாதிக்கபடுவது இலங்கையில் உள்ள அப்பாவி தமிழர்கள்.
Posted by Anonymous to தமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா at 6:25 PM, February 10, 2009
dinamalar is dinamalam only. pl stop to put thenews from it because it stinks
sangamithra
விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலிலேயே நேற்று சுந்தரபுரம் பகுதியில் பொதுமக்களும் படையினரும் கொல்லப்பட்டதாக படைத்தரப்பு பிரசாரங்களை முடுக்கிவிட்டுள்ள நிலையில், இடம்பெயர்ந்து வந்த மக்கள் மீது படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலேயே அவர்கள் கொல்லப்பட்டதாக தெரியவருகின்றது.
மக்கள் கொல்லப்பட்ட இடத்தை படம்பிடித்துக் காட்டியிருந்த சிறீலங்கா இராணுவத் தரப்பு அங்கு படையினருக்கு சேதங்கள் ஏற்பட்டதற்கான எந்த ஆதாரங்களையும் காண்பிக்கவில்லை.
அத்துடன் குண்டு வெடித்து காயம்பட்டதற்கான அடையாளங்கள் இல்லாமல் துப்பாக்கி வேட்டுக்களிலேயே மக்கள் கொல்லப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
எனவே திட்டமிட்ட ரீதியில் சர்வேதச ஒத்துழைப்புடன் இனப்படுகொலையை கொடூரமாகப் புரிந்துவரும் சிறீலங்கா அரசின் இன்னொரு படுகொலை வடிவம் இதுவென ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமிழ் மக்களின் படுகொலை குறித்து வாய் மூடி மௌனம் காக்கும் அமெரிக்க (தூதர்) தொடக்கம், மனித உரிமைகள் அமைப்புகள் வரைக்கும் உடனடியாக இந்தச் சம்பவம் குறித்து ஆராயாமல் பிரச்சாரங்களை தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
you want my ip : 122.164.164.0
நண்பர் இராணுவம் வெளியிட்ட தகவல்களை காணவில்லை போலும்..
இராணுவ இணையத்தளம் தாக்குதல் விசுவமடு என்னும் இடத்தில் நடந்ததாக தெரிவித்தது.. ஆனால் பாதுகாப்பமைச்சு இணையம் தாக்குதல் கிளிநொச்சியில் நடந்ததாக தெரிவித்தது...
இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன எண்றால் விசுவமடு எனும் இடம் கிட்டத்தட்ட கிளிநொச்சியில் இருந்து 8 மைல் தூரத்தில் இருக்கிறது, மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தது...
தாக்குதல் நடந்து இருக்கலாம் விசுவமடுவில் இராணுவத்தின் தாக்குதலால் கொல்லப்பட்ட மக்கள் தற்கொலை தாக்குதலால் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது...
கொல்லப்பட்ட மக்கள் சிலரின் உடல்களை சிங்கள பாதுகாப்பு அமைச்சக இணையம் வெளியிட்டு இருந்தது.. அதில் மரங்களுக்கு கீழ் உள்ள ஒரு இடத்தில் உடலங்கள் இரண்டு கிடப்பதை காட்டினார்கள்... அதிலும் செய்ய பட்ட சோடிகை போதவில்லை...
28 பேரை பலிவாங்கி 90 பேரை காயப்படுத்திய குண்டினால் மேலே இருக்கும் மரங்களில் இருந்து ஒரு இலைகூட உதிரவில்லை என்பதோடு தூசு துணிக்கைகள் கூடவா உடடங்கள் மீது ஓட்ட வில்லை...
இப்படியான பிரச்சாரங்கள் சில கேணைகளுக்கு நம்ப போதுமானது.. ஆனால் இவைகளை பார்த்து பழகிப்போன எங்களுக்கு அதர பழசு...
இப்படியான பிரச்சாரங்கள் இந்திய அமைதிபடை காலத்தில் இருந்தே நாங்கள் பழகியதுதான்...
அரை குறை அறிவோடு உண்மைய ஆராய கூட முயலாமல் ஒரு பதிவு தேவையா...??
( பி.கு:- இதை நீங்கள் வெளியிடக்கூட தேவை இல்லை... எங்கள் மக்களின் அக்கறையோடு பதிந்து இருக்கிறீர்கள் ஆதலால் உண்மைக்கும் பொய்க்கும் உள்ள வித்தியாசத்தை சொல்ல வேண்டும் எண்று பட்டது , அவ்வளவே)
Post a Comment